×

கொரோனா வைரஸ் பரவாமல் அரசு எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கவை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.....ரஜினிகாந்த் அறிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, உலகளவில் 8,944ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,18,766 ஆக உயர்ந்துள்ளது. அதில், 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.  கொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 169ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மூட  உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவாமல் இருக்க அரசு உரிய நவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸால் இதுவரை இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது; தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Govt ,Rajinikanth , Corona Virus, Government, Action, Scholarship, Rajinikanth
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்