×

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது தான்..ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதமல்ல: அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது தான் என்றும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதமல்ல என்பதையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,919 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்த கொடூர கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதம் என மற்ற நாடுகள் குற்றம்சாட்டின. மேலும், இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில் கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல என்றும், கொரோனா இயற்கையான வைரஸ் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சீன விஞ்ஞானிகளால் முன்னர் வெளியிடப்பட்ட வைரஸின் மரபணு வரிசை தரவுகளின் அடிப்படையில், ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் வைரஸ் ஒரு ஆய்வக கட்டுமானம் அல்லது வேண்டுமென்றே கையாளப்படுவது அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் 17ம் தேதியன்று நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கட்டுரையில் கொரோனாவின் மூலம் என்று அழைக்கப்படும் சார்ஸ் மற்றும் சிஓவி-2 ஆகியவற்றில் இருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

சார்ஸ் மற்றும் சிஓவி-2 ஸ்பைக் புரதம், மனித உயிரணுக்களை பிணைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உண்மையில், விஞ்ஞானிகள் இது இயற்கையான வைரஸ் அமைப்பாகும், மரபணு பொறியியலின் தயாரிப்பு அல்ல என்று முடிவு செய்துள்ளனர், என அறிவியல் மற்றும் ஆராய்ச்சி செய்திகள் குறித்த வலைத்தளமான சயின்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது. சார்ஸ் மற்றும் சிஓவி-2 இன் மூலக்கூறு அமைப்பு வவ்வால்கள் மற்றும் பாங்கோலின்களைப் போன்றது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸ் மரபணு வரிசை தரவுகளை ஒப்பிடுவதன் மூலம், சார்ஸ் மற்றும் சிஓவி-2 இயற்கையாக உருவானது என்பதை நாங்கள் உறுதியாக தீர்மானிக்க முடியும், என்று ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச்சில் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் இணை பேராசிரியரும், சயின்ஸ் டெய்லி பத்திரிகையின் ஆசிரியருமான கிறிஸ்டியன் ஆண்டர்சன் கூறியுள்ளார்.Tags : Coronavirus Not Man-Made ,Scientists , Corona virus, natural Origin, biological weapon, USA, China, Wuhan
× RELATED சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல்