×

ஓசூரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பற்றி விபத்து: 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை!

பெங்களூரு: ஓசூர் அலசனத்தம் பகுதியில் சிலிண்டர் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்காட்டி வருகின்றனர். ஓசூர் அலசனத்தம் பகுதியில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் அருகிலுள்ள நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓசூரில் இருந்து சிலிண்டர் ஏற்றிவந்த லாரியானது வசந்தநகர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே  வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் ஏறி, இறங்கியுள்ளது. அச்சமயம் லாரியில் இருந்த சிலிண்டரின் மூடியானது திறக்கப்பட்டு கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ஓட்டுநர் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ளவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதற்கு முன்பாகவே கேஸ் கசிவால் சிலிண்டர்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

அதேசமயம் தொடர்ந்து கசிவானது வெளியேறிக்கொண்டிருந்த போது தீயானது மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் அருகிலுள்ள 10க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், அப்பகுதியில் இருசக்கர வாகனங்களை பழுது பார்த்துக்கொண்டிருந்த கடைகளில் இருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து, அருகிலுள்ள துணிக்கடை, மளிகை மற்றும் கோழிக்கடைகள் என அனைத்தும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த இருவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Tags : Hosur ,truck crashes , Hosur, Gas Cylinder, Truck, Accident, Vehicles, Fireplace
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு