×

நாவல் கொரோனா,கோவிட் -19 பாண்டமிக், கோவிட் -19 - மனித குலத்தின் எதிரி : புதுப்புது பெயர்களுடன் வர்ணிக்கப்படும் உயிர்கொல்லி கொரோனா வைரஸ்

சென்னை : கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் இதற்கு மனித குலத்தின் எதிரி என்ற புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு மற்ற எந்த தொற்றுக்கும் இல்லாத வகையில் பல்வேறு பெயர்களை உலக சுகாதார அமைப்பு சூட்டி வருகிறது. இதன் மூலம் மனித சமூகத்திற்கு தொடர் எச்சரிக்கையை அந்த அமைப்பு விடுத்த வண்ணம் உள்ளது. நாவல் கொரோனா என்று அழைக்கப்பட்டதை தொடர்ந்து பின்னர் கடந்த மாதம் 12ம் தேதி இந்த வைரஸ் தாக்குதலுக்கு கோவிட்-19 என்று பெயர் சூட்டப்பட்டது.

அதாவது கொரோனா வைரஸ் மற்றும் நோய் என்ற வார்த்தைகள் மற்றும் 2019ம் ஆண்டைச் சேர்த்து கோவிட் -19 என்ற பெயர் உருவாக்கப்பட்டது. மரணங்கள் தொடர்ந்ததால் கட்டுக்கடங்காமல் லக நாடுகளில் பரவும் தொற்று எனக் கூறிய உலக சுகாதார அமைப்பு, அதற்கு கோவிட் 19 என்ற வார்த்தையுடன் பாண்டமிக் என்ற வார்த்தையையும் சேர்த்தது. தற்போது கோவிட் -19- மனித குலத்தின் எதிரி என்ற வாசகத்தையும் அந்த அமைப்பு அறிமுகம்ப்படுத்தியுள்ளது. இதனிடையே சார்ஸ் நோயுடன் கொரோனாவின் இயல்பு ஒத்துப் போவதால், சார்ஸ்-கோவ்- 19 என்று சில விஞ்ஞானிகள் பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 169ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, உலகளவில் 8,944ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,18,766 ஆக உயர்ந்துள்ளது. அதில், 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 169ஆக அதிகரித்துள்ளது.

Tags : Novel Corona ,Kovit-19 Pandemic , Novel Corona, Kovit-19 Pandemic,
× RELATED மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய...