×

வாய்க்கால் தூர்வாரும் போது 2500 ஆண்டுக்கு முன்பு உள்ள முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் போது, 2500 ஆண்டுக்கு முன்பு உள்ள முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் கிராமத்தில் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் நடை பெற்று வருகிறது. இந்த கிராமத்தில் நடுக்காடு பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் போது இரண்டு மண்பானைகள் புதைந்திருப்பது தெரிய வந்தது. ஒரு பானை உடைந்த நிலையிலும் மற்றொரு பானை உடையாமல் உள்ளது.

இதில் உடையாமல் உள்ள பானையில் மனித எலும்பு துண்டுகள், பற்கள், கத்தி, மண்ணாலான தட்டு, கிண்ணங்கள் போன்ற பாத்திரங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தகவலறிந்த வேதாரண்யம் தாசில்தார் சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று விபரங்களை சேகரித்து நாகை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி உள்ளார். இன்று (19ம் தேதி) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முன்பு பானை தோண்டி எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார். இந்த முதுமக்கள் தாழி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சில குறியீடுகளை வைத்து தெரிவித்துள்ளனர்.

Tags : The urn
× RELATED மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற...