×

இறப்பு விகிதம் குறைந்தது எப்படி?: கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த கையேட்டை வெளியிட்ட சீன மருத்துவமனை

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் வராமல் தடுப்பது குறித்தும் வந்தால் எடுக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் சீனாவின் சுகாதார அமைப்பு புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, உலகளவில் 8,944ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,18,766 ஆக உயர்ந்துள்ளது. அதில், 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மகொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 169ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உலகெங்கிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுடன் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக சீன மருத்துவமனை ஒன்று, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது. கிழக்கு சீனாவில் உள்ள ஜெஜியாங் பல்கலைக்கழக மருத்துவமனை கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள இந்த கையேட்டை, ஆன்லைனில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மருத்துவ ஊழியர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த கையேடு, இத்தாலியன், கொரிய, ஜப்பானிய மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது,

கொரோனா வைரஸ் தொடர்பான இந்த கையேடு, தடுப்பு மற்றும் கட்டுப்பாடு,நோயறிதல் மற்றும் சிகிச்சை அனுபவம்,நர்சிங் அனுபவம்.ஆகிய 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் எழுதப்பட்ட இந்த கையேடு, மருத்துவமனையில் இரண்டு மாத காலம் நடைபெற்ற நோய்  தடுப்பு மற்றும் சிகிச்சை அனுபவத்தை விளக்குகிறது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ள நோயாளிகளுக்கு, இந்த மருத்துவமனை சிகிச்சை அளித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 104 நோயாளிகளில் 78 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். எனினும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நோய் தொற்றோ,கொரோனாவால் நோயாளிகள் உயிரிழப்போ ஏற்பட்டதில்லை என்பது இந்த மருத்துவமனைக்கு பெருமைக்குரியதாகும். இத்தகைய மருத்துவமனை வெளியிட்டுள்ள இந்த கையேடு, கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், தங்களது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவிகரமாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : hospital ,Chinese , Corona, Virus, Wuhan, China, Treatment, Hospital
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...