×

இந்திய பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சியால் கடும் வேதனையில் முதலீட்டார்கள்: சென்செக்ஸ் 2045.75 புள்ளிகள் சரிந்து 26,823.76 புள்ளிகளுடன் வர்த்தகம்

மும்பை: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தொடர்ந்து 3 வாரங்களாக இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.  அதிகபட்சமாக, கடந்த மாதம் 28-ம் தேதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 ஆக இருந்தது. கடந்த மார்ச் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ்  37,577 புள்ளிகளாக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள் சரிந்து 11,219.20 ஆனது. இதனால், ஒரே நாளில் பங்குகளின் மதிப்பு 5,53.013.66 கோடி சரிந்து 1,46,87,010.42 ஆக ஆனது. மும்பை பங்குச்சந்தை இதற்கு  முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது.

இதனைபோல், இந்த வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் தொடங்கிய உடனேயே பங்குச் சந்தையின் புள்ளிகள் மளமளவென குறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்றும் வர்த்தக தொடத்தில் பங்குச்சந்தையின் புள்ளிகள் சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2045.75 புள்ளிகள் சரிந்து 26,823.76 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 500 புள்ளிகள் சரிந்து 7,944 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.  பங்குச்சந்தைகள் தொடர்ந்து, வீழ்ச்சியில் உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மனவேதனை ஏற்பட்டுள்ளது.

Tags : Sensex , Sensex plunges by 2045.75 points to close at 26,823.76 points
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...