×

அபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: அபுதாபியிலிருந்து எத்திஹார்டு ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.00 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து, மீண்டும் அந்த விமானம் காலை 5.00 மணிக்கு அபுதாபி புறப்படத் தயாரானது. அதற்கு முன்னதாக விமான நிலைய ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, விமானத்தின் இரண்டு இருக்கைகளில் போடப்பட்டிருந்த குஷன்சீட் சற்று மேலே தூக்கிக்கொண்டிருந்ததை கண்டனர். அதனை சோதனைசெய்தபோது அந்த இரண்டு இருக்கையின் அடியில் 2 பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. உடனடியாக விமானத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு ஏதாவது இருக்கிறதா என பார்சல்களை பிரித்து பார்த்தனர்.

அப்போது, அதனுள் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 6 தங்கக்கட்டிகள் மறைத்துவைக்கபப்ட்டிருந்தன. இதையடுத்து உடனடியாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது 4 கிலோ எடை உடைய தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு 1.65 கோடி. இதேபோல், சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நேற்று காலை 5.00 மணிக்கு சென்னை வந்தது. மீண்டும் காலை 7.00 மணிக்கு உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்படத்தயாரானது. அந்த விமானத்தின்  சீட்டுக்கடியில் 3 தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மொத்த எடை 600 கிராம். சர்வதேச மதிப்பு 25.5 லட்சம்.சுங்க அதிகாரிகள் நகைளை பறிமுதல் செய்தனர். மேலும்  விமான நிலைய சிசிடிவி கேமராவை வைத்து அபுதாபி, சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்திவந்த ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags : Abu Dhabi ,Singapore , Abu Dhabi, Singapore, smuggling, gold
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...