×

கொரோனோவை சமாளிக்க சச்சின் விழிப்புணர்வு வீடியோ

மும்பை: கொரோனா அச்சுறுத்தலை சமாளிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து  அவர் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் , கொரோனாவை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வழிமுறைகள் குறித்தும், மக்கள் அரசு நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க  வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். கூடவே , ‘குடிமக்களான நாம் பொறுப்புடன்  செயல்பட வேண்டும். கொரோனாவால் பாதிக்காமல் இருக்க எளிய வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பாதுகாப்பான வாழ்க்கைக்கு இந்த அடிப்படை வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் என பலரும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Sachin , Sachin ,awakening video , Corono
× RELATED பாஜவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்: சச்சின் பைலட் கருத்து