×

மாநில பளு தூக்கும் போட்டியில் கல்பாக்கம் வீரர்களுக்கு 5 தங்கம்

திருக்கழுக்குன்றம்: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் கல்பாக்கம் வீரர்கள்  5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர். மாநில அளவிலான 17வது பளு தூக்கும் போட்டி கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடந்தது. இதில், தமிழ்நாடு முழுவதும் 15 மாவட்டங்களில் இருந்து, பல்வேறு எடைப் பிரிவுகளில் சுமார் 300 வீரர்கள் பங்கேற்றனர். கல்பாக்கம் மற்றும் திருக்கழுக்குன்றத்தில் இயங்கி வரும் ராயல் உடற்பயிற்சி கூடத்திலிருந்து 10 பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். அவர்களில் கல்லூரி மாணவர்களான ரித்திக் சஞ்சய், ஷக்லின் முஸ்தாக் இருவரும் மொத்தம் 6 பதக்கங்களை வென்றனர். அதில்   ரித்திக் சஞ்சய் 3 தங்கம் வென்ற நிலையில்,  ஷக்லின் முஸ்தாக் 2 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினார். தங்கம் வென்ற வீரர்களுக்கு  கல்பாக்கத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.Tags : Kalpakkam , State Weightlifting Tournament, Kalpakkam Players, 5 Gold
× RELATED ரசிகர்கள் இல்லாமல் ஓடினால் வீரர்களுக்கு உத்வேகம் கிடைக்குமா?