×

ஐசிசி நடுவர் குழுவில் இந்தியாவின் ஜனனி, ரதி

துபாய்: இந்திய பெண் நடுவர்கள் ஜனனி நாராயணன், வ்ரிந்தா ரதி இருவரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நடுவர் மேம்பாட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து ஐசிசி யு-19 உலக கோப்பை, மகளிர் டி20 உலக கோப்பை மற்றும் ஐசிசி தகுதிச் சுற்று தொடர்களில் பணியாற்றும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது. சிறப்பாக செயல்படும்பட்சத்தில் சர்வதேச மற்றும் சிறப்பு நடுவர் குழுவிலும் இவர்கள் இடம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போட்டி நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.லட்சுமியுடன் சேர்த்து ஐசிசி-ல் பணியாற்றும் இந்திய பெண் நடுவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது

Tags : ICC Arbitration Committee ,Rathi ,Janani , Janani, Rathi,ICC Arbitration Committee
× RELATED மீ டூ விவகாரத்தை பரபரப்புக்காக பயன்படுத்தாதீர்கள் : ஜனனி ஐயர் கருத்து