×

தஞ்சாவூர் கோட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு விவேகானந்தர்-திருவள்ளுவர் சிலையை இணைக்க கடல்சார் பாலம்

சென்னை: விவேகானந்தர் நினைவு பாறையையும்-திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கடல்சார் பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்து பேசியதாவது: ஒரு கோட்டத்தின் அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளில் ஐந்து வருட காலத்திற்கு செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டத்தின் மூலம் பராமரிக்கப்படுகிறது. பொள்ளாச்சி கோட்டத்தில் 2012-13-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர், பழனி மற்றும் சிவகங்கை கோட்டங்களில் உள்ள 3,664 கி.மீ. நீள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் ரூ. 3,556 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள 834 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் ரூபாய் 1,947 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ளது. சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்க்கும் பொருட்டு எண்ணூர் துறைமுகத்தில் துவங்கி பூஞ்சேரி சந்திப்பு வரை 133 கி.மீ. நீளத்தில் சென்னை எல்லைச் சாலை அமையவுள்ளது. இதில் 97 கி.மீ. புதிய சாலையாகவும், 36 கி.மீ. தற்போதுள்ள சாலைகளை மேம்படுத்தும் வகையில் பணிகள் 5 பிரிவுகளாக செயலாக்கப்படவுள்ளது. கன்னியாகுமரி துறைமுகத்தில், விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள படகுத் துறை, ரூ.20 கோடி மதிப்பில், நீட்டிப்பு செய்யப்படவுள்ளது. ரூ.35 கோடி மதிப்பில், கன்னியாகுமரியில், விவேகானந்தர் நினைவுப் பாறையையும், அய்யன் திருவள்ளுவர் சிலை பாறையையும் இணைக்கும் சிறப்பு மிக்க பாதசாரிகள் நடந்து செல்ல சுமார் 140 மீட்டர் நீளம் கொண்ட கடல்சார் பாலம் அமைக்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் உத்தேசித்துள்ளது.


Tags : Vivekananda-Tiruvalluvar ,Vivekananda-Thiruvalluvar ,Thanjavur Fort , Thanjavur Fort, Vivekananda-Thiruvalluvar Statue, Marine Bridge
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...