×

மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்ப திருத்தம் இன்று செய்யலாம்

சென்னை: மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தங்கள் ஏதாவது இருந்தால் இன்று மாலைக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற விரும்புவோர் சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதித்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடக்கிறது. ஆனால் இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வில் சில மாற்றங்களை சிபிஎஸ்இ செய்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் மார்ச் 17ம் தேதி மாலை வரை ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவித்தது.

அதன்படி இ-சலான், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றின் மூலம் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதையடுத்து இறுதிக் கட்ட சரிபார்ப்பு நேற்று வரை நடந்தது. கட்டணம் செலுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் கூடுதல் செயலாளர், சிபிஎஸ்இ என்பவரை  இன்று (19ம் தேதி) தொடர்பு கொள்ள வேண்டும். அப்போது கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரங்களையும் இணைக்க வேண்டும். கட்டணம் செலுத்தும் இறுதி நாளுக்கு பிறகு கட்டண சரிபார்ப்புக்கான விண்டோ மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். அதற்கு பிறகு தேர்வுக்கான திருத்திய தேதி தெரிவிக்கப்படும்.

சிபிஎஸ்இ ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, சில முக்கிய தேதிகளின் விவரம் வருமாறு:
தகுதித் தேர்வின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் மார்ச் 17, இறுதி சரிபார்ப்பு 18ம் தேதி, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மார்ச் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை, தகுதித் தேர்வு ஜூலை 5ம் தேதி நடக்கும்.
மேற்கண்ட தகுதித் தேர்வு நாடு முழுவதும் 112 நகரங்களில் நடக்கிறது. நாடு முழுவதும் 14வது முறையாக நடக்கும் இந்த தகுதித் தேர்வில் ஓஎம்ஆர் என்னும் தாளில்தான் விடை குறிப்பிட வேண்டும். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை பாடம் நடத்த விரும்பும் ஆசிரியர்கள் தாள் 1 தேர்வையும், 6ம்  வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் தாள் 2க்கான தேர்வையும், 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும். இந்நிலையில், இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை சிபிஎஸ்இ இணைய தளமான ctet.nic.inல் வெளியிட உள்ளது.


Tags : Federal government, teacher qualification, application revision, today
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...