×

கோயம்பேடு மார்க்கெட்டை மூட உத்தரவு போடவில்லை: சிஎம்டிஏ விளக்கம்

சென்னை: சென்னை பெருநகர பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகங்களை மூடுவதற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயம்பேட்டில் அமைந்துள்ள பெருநகர பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு காய்கனி அங்காடி பொதுமக்கள் நாள்தோறும் அதிகம் பயன்படுத்தும் மற்றும் கூடும் இடங்களாக உள்ளன. இருப்பினும் பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கு போக்குவரத்தும், காய்கனி அங்காடி மிகவும் இன்றியமையாதவை.

எனவே இவ்விரு இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடினாலும் தொடர்ந்து இயங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இங்கு கடைகள் வழக்கம் போல் இயங்கும். மக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன. சில சமூக வலைதளங்களில் கோயம்பேடு காய்கனி அங்காடி மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை மக்கள் நம்ப வேண்டாம். இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


Tags : CMDA ,Coimbatore , Coimbatore Market, Close, Not Put, CMDA Description
× RELATED அடுக்குமாடி குடியிருப்பு.. அனைத்து...