×

பராமரிப்பு பணி முடிந்தது: பழநி கோயிலில் 1ம் எண் வின்ச் இயக்கம்

பழநி: பராமரிப்பு பணி முடிந்ததையடுத்து, பழநி கோயிலில் 1ம் எண் வின்ச் இன்று இயக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்காக மேற்கு கிரி வீதியில் இருந்து 3 வின்ச்கள் இயக்கப்படுகின்றன. பராமரிப்பு பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் 1ம் எண் வின்ச் நிறுத்தப்பட்டது. டிரம் ஷாப்ட், வின்ச் பெட்டி பழுது போன்ற பராமரிப்பு பணிகள் நடந்தது.

பராமரிப்பு பணிகள் முடிந்ததையடுத்து நேற்று வின்ச் பெட்டியில் கற்களை அடுக்கி சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில் இன்று 1ம் எண் வின்ச் இயக்கப்பட்டது. முன்னதாக வின்ச் பெட்டிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பழநி கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் வெங்கடேசன்,  கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து  ெகாண்டனர்.

ரோப் கார் பராமரிப்பு
பழநி தெற்கு கிரி வீதியில் ரோப் கார் இயக்கப்படுகிறது. பயண நேரம் 3 நிமிடமாகும். இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 400 பேர் பயணிக்கலாம். இந்த ரோப் கார் மாதாந்திர பணி  நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை ஒரு தினம் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் வின்ச் மற்றும் படிக்கட்டுகளில் பயணிக்கும்படி கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 


Tags : Palani Temple , Maintenance Work, Palani Temple, No. 1 Winch Movement
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...