×

கொரோனாவை மாட்டு கோமியம் கட்டுப்படுத்தும் என்று வதந்தி: கொல்கத்தாவில் களைக்கட்டும் வியாபாரம்....ஒரு லிட்டர் ரூ.500

கொல்கத்தா: கொரோனாவை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய் கொடுத்து சிலர் வாங்கிச் செல்கின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. கொரோனா வைரசுக்கு 7500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 25 வெளிநாட்டினர் உள்பட 150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தை குறைக்கு வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொல்கத்தாவில் கொரோனா வைரஸை மாட்டு கோமியம் கட்டுப்படுத்தும் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் 2 மாடுகள் வைத்து வளர்த்துவரும் கொல்கத்தாவை சேர்ந்த மகபூப் அலி என்பவரிடம், ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய்க்கும் ஒரு கிலோ மாட்டு சாணத்தை 500 ரூபாய்க்கும் சிலர் வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளார். மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தைவிட இதில் பல மடங்கு வருமானம் தனக்கு கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியம் கொரோனாவை குணமாக்கும் என எந்த மருத்துவ ஆய்வறிக்கையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kolkata , Corona, Cow Comium, Rumor, Calcutta
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்