×

காலையில் உயர்வு..மாலையில் சரிவு...கண்ணாமூச்சி ஆடும் மஞ்சள் உலோகம் : சவரன் ரூ.568 குறைந்து ரூ.30,944-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து ரூ.30,944-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.71 குறைந்து ரூ.3,868க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.39-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உச்சத்திலேயே இருந்த தங்கத்தின் விலை கடந்த 11ம் தேதி சற்று குறைய தொடங்கியது. ஆனால் 13ம் தேதி அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,096 குறைந்து ரூ.32,160க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதற்கு அடுத்தநாள் சவரனுக்கு ரூ.688 குறைந்து ரூ.31,472க்கு விற்கப்பட்டது. இந்த வாரத் தொடக்கத்தில் கடந்த திங்களன்று மட்டும் சற்று உயர்ந்த தங்கம் விலை, சவரன் ரூ.31,544க்கு விற்பனையானது. ஆனால் நேற்று தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில், ஒரே நாளில் சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.30,560ஆக சரிந்திருந்தது. இந்த நிலையில் தான், சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.952 உயர்வை சந்தித்து ரூ.31,512க்கு விற்பனையானது. ஆனால் மாலை நிலவரப்படி சவரன் ரூ.568 குறைந்து ரூ.30,944க்கு விற்பனை ஆகிவருகிறது. 


Tags : collapse ,morning hike , The morning hike, the collapse of the roof ... the yellow metal in the glass: the shaving is down by Rs 568 and sells for Rs.30,944
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...