×

தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் எதிரொலி: உச்சநீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் 4-ஆக குறைப்பு

டெல்லி: கொரோனா எதிரோலியால் உச்சநீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் 4-ஆக குறைக்கப்படும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தற்போது 6 விசாரணை அமர்வுகள் உள்ள நிலையில் நாளை முதல் 4ஆக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. கொரோனா வைரசுக்கு 7500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 25 வெளிநாட்டினர் உள்பட 147 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தை குறைக்கு வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய முன்தினம் உச்சநீதிமன்றத்தில் அனைத்து அமர்வுகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.

முக்கிய வழக்குகளை விசாரிக்கும் 6 அமர்வுகள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், தினமும் 12 அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், நீதிமன்ற ஊழியர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. காய்ச்சல், இருமல் உள்ள யாரும் நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அதிக மக்கள் கூடுவதைத் தடுப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மேலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உச்சநீதிமன்றத்தில் அமர்வுகளின் எண்ணிக்கை 4-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் சார்பில் கூறியதாவது; கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் உடல்நலக் கேடுகளை கருத்தில் கொண்டு நாளை நான்கு நீதிமன்றங்களை மட்டுமே நடத்த உயர் நீதிமன்றம் இன்று முடிவு செய்தது.

Tags : hearing sessions ,Supreme Court , Coronavirus virus, Supreme Court, trial sessions, reduction
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...