×

வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் பிஎஸ்என்எல்-லின் பங்கு மகத்தானது.. நிறுவனத்தை விற்கும் திட்டம் அரசுக்கு இல்லை : மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி : பிஎஸ்என்எல் நிறுவனத்தை விற்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்களுக்கு பதில் அளித்த இவர், இதனை கூறியுள்ளார். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் தற்போதைய எண்ணிக்கை எத்தனை என்று திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தை விற்கப்போவதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அரசு அச்சத்தை உருவாக்கியதாலேயே ஏராளமானோர் வேறு சேவை நிறுவனங்களுக்கு மாறியதாக தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மரபுக்குள் தாம் செல்ல விரும்பவில்லை என்று விளக்கம் அளித்தார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து 80,000 பேர் விருப்ப ஒய்வு பெற்றதால் உருவான காலிப் பணியிடங்களை ஒழிப்பதே அரசின் திட்டம் என்று திரிணாமுல் உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.இதனை மறுத்த அமைச்சர், பிஎஸ்என்எல் நிறுவனத்தை முழுவதோ அல்லது தனியாருக்கு விற்கும் எண்ணமும் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் பேசிய அவர், மக்களுக்கு நேரடியாக தொலைத் தொடர்பு சேவைகள் கிடைப்பதற்கும் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு கட்டமைப்பும் சீராக இருப்பதாகவும் பிஎஸ்என்எல்-க்கு இருக்கும் முக்கியத்தை அரசு உணர்ந்திருப்பதாக கூறினார். வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் பிஎஸ்என்எல்லின் பங்கு மகத்தானதாக இருந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Tags : BSNL ,earthquake ,disasters ,floods ,earthquakes , BSNL's role in floods, earthquakes, etc. is enormous.
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்