- HC சப்ளையர்
- எல்பிஜி சிலிண்டர் சப்ளையர்கள்
- சப்ளையர்
- எண்ணெய் நிறுவனங்கள்
- எல்பிஜி சிலிண்டர் எண்ணெய் நிறுவனங்கள்
- உயர் நீதிமன்றம்
- சென்னை
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்வதற்கு கூடுதல் கட்டணம் வாங்கினால் வினியோகஸ்தர் உரிம்ம ரத்து செய்யப்படும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, கூடுதல் கட்டணம் வாங்கும் வினியோகஸ்தர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னைச் சேர்ந்த லோகிஸ்வரர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் போது கூடுதல் கட்டண வாங்கி கொள்ளுமாறும், அதனை வினியோகஸ்தர் ஊழியர்களிடமிருந்து பறித்துகொள்வதாகவும், மேலும், கட்டணம் வசூலிக்க ஊழியர்களை கட்டாடப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வகையில் பொதுமக்களின் பணம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 500 கோடிக்கு மேல் சுரண்டப்படுவதாகவும், இதனை தடுக்க சிலிண்டர் விநியோகம் செய்யும் நபருக்கு சிருடை மற்றும் அடையாள அட்டை வழங்கி அவர்களின் பணிகளை வரைமுறை செய்ய உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேசன், கிருஷ்ண ராமசாமி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக உரிமை ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையில் 25 முதல் 30 சதவிகிதம் பிடித்து கொள்வதாகவும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 4 முறை இந்த குற்றச்சாட்டு வந்தால் வினியோகஸ்தர் உரிம்ம ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019-20 நிதியாண்டில் தமிழகத்தில் மட்டும் 21 லட்சத்து 24 ஆயிரம் அபாரம் பெற்றுள்ளோம். கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து பதிலளிக்க இந்தியன் கார்ப்ரேசன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்குடன் தங்களையும் இணைக்குமாறு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தின் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவையும் ஏப்ரல் 8-ம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.