×

காற்றில் 3 மணி நேரமும், இரும்பு, பிளாஸ்டிக் மீது 3 நாட்களும் கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும் : புதிய ஆய்வு முடிவுகள் வெளியீடு

வாஷிங்டன் : உலக நாடுகளை நடுநடுங்க செய்து வரும் கொரோனா வைரஸ் காற்றில் பல மணி நேரம் உயிருடன் வாழும் தன்மை கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நிதியுதவியில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய கொரோனா வைரஸ் தரையிலும் காற்றிலும் பல மணி நேரம் உயிருடன் இருக்கக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் துருப்பிடிக்காத இரும்பில் 2 அல்லது 3 நாட்கள் உயிருடன் இருக்கும் என்றும் அட்டைகள் மீது 24 மணி நேரம் உயிருடன் கொரோனா வைரஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தும்பும் போதும் இரும்பலின் போதும் வெளியேறும் வைரஸ் காற்றில் 3 மணி நேரம் உயிருடன் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் சில வினாடிகளில் அடுத்தவருக்கு பரவி விடும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். சார்ஸ் வைரஸுக்கும் கொரோனா வைரஸுக்கும் இடையே பல்வேறு காரணிகள் ஒத்துப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனாலேயே கொரோனா வைரஸ் தொற்றுவோருக்கு SARS-COV-2 என்று பெயர் சூட்டியுள்ளனர். ஆனால் அதே நேரம் சார்ஸ் வைரஸால் 800 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு 8000 பேர் இறந்தது ஏன் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளிக்க இயலவில்லை.

Tags : Corona, Virus, Researchers, Sars, Iron
× RELATED கள்ளக்காதலியை கொன்ற இந்திய வம்சாவளிக்கு 20 ஆண்டு சிறை