×

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நிஜாமுதீன், ராஜ்தானி உள்ளிட்ட 85 முக்கிய ரயில்கள் மார்ச் 31ம் தேதி வரை ரத்து

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் உள்ள முக்கிய வழித்தடங்களில் 85 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்டுள்ள 85 ரயில்கள் மேற்கு ரயில்வே, மத்திய மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் கீழ் இயக்கப்படுபவை ஆகும். ரத்தான ரயில்களின் பட்டியலில் மும்பை, டெல்லி, நிஜாமுதீன், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மும்பை - ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களும் அடக்கம். மார்ச் 31ம் தேதி வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை கட்டுப்படுத்த பிளாட்பார்ம் டிக்கெட் 10 ரூபாயில் இருந்து ரூ. 50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்பதிவு பயணச் சீட்டுகளை பொதுமக்கள் ரத்துச் செய்து வருகின்றன. இதனால் சுற்றுலாத் துறை மிகப்பெரிய சறுக்கலை சந்தித்து வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் கிழக்கு மண்டலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் இது 67%அதிகமாகி இருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 80% பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 6 பேர் கொண்ட குழுவை ரயில்வே அமைச்சகம் அமைத்துள்ளது. அவசிமற்ற ரயில் பயணங்களை தவிர்க்குமாறும் பொதுமக்களை ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக போதிய முன்பதிவு இல்லாததால் சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், செகந்திராபாத் உள்ளிட்ட 11 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.


Tags : Rajdhani ,spread ,Nizamuddin , Corona, virus, trains, cancellations, Eastern Railways
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...