×

காமக்கொடூரன் வேட்டையில் சிக்கி இளம் வயதில் கர்ப்பமடையும் பெண்கள் அதிகம்

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகாக்களில் இளம்பெண்கள் அதிக அளவில் காணாமல் போவதும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுதலும், பள்ளி பருவத்திலேயே இளம் பெண்கள் கர்ப்பமடைந்து சீரழிவதும் தொடர் கதையாக இருக்கிறது.

இது போன்ற சீரழிவிற்கு செல்போன் போன்ற சாதனங்களும் காரணிகளாக அமைந்துவிடுகிறது. பள்ளி மாணவிகள் சக மாணவர்களால் சீண்டப்படுவதும், வகுப்பு ஆசிரியர் மூலம் பாதிக்கப்படுவதும், ஒரே வாகனத்தில் செல்லும்போதோ அல்லது ஒரே தெருவில் உள்ளவர்களால் அல்லது பேருந்தில் செல்லும்போது ஏற்படும் ஆண்பழக்கம் சினிமாவை போல் காதலாக மாறிவிடுகிறது. பள்ளி நேரம் போக மீத நேரத்தில் பேருந்துநிலையம் திரையரங்கு சந்துபொந்து என்று நகரில் எங்கெங்கே இடம்கிடைக்கிறதோ அங்கெல்லாம் நிறைந்து காணப்படும் இளம்ஜோடிகள்.

18 வயது நிரம்பாத பெண்ணும் 21 வயது நிரம்பாத ஆணும் அடிக்கும் கொட்டம் நகரின் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத தெருக்களில் அதிகரிக்கிறது. விடுமுறை என்றால் சினிமா பார்க், சுற்றுலா தலம் மற்றும் கடற்கரையோரங்களில் கூடி மகிழ்வது கணக்கிலடங்காது, தங்களது பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கோ அல்லது கடைக்கு வேலைக்கு அனுப்பிவைக்கும் பெற்றோர் தங்களது குடும்ப வருமானத்தை பெருக்கவும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கும் வேலையில் கவனமாக உள்ளனர், ஆனால் தங்களது பிள்ளைகள் ஒழுக்கமானவர்களாக இருக்கின்றனரா என்பதை கண்காணிக்க மறந்துவிடுகின்றனர், தாய் தந்தையரின் மறதிதான் தவறு செய்யும் இளம் பிள்ளைகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. தங்களது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், அவர்களது நடவடிக்கை என்ன, பெற்றோர் கட்டுப்பாட்டில் இருக்கின்றனரா, என்று பார்ப்பது கிடையாது. இதனால் எதிர்காலத்தில் பெற்றோர் கண்கலங்கி நிற்கும் அளவிற்கு தங்களது பிள்ளைகளின் முடிவு உள்ளது.

பெற்றோர்களின் அலட்சியத்தை பலமாக்கி கொண்டு நேர்த்தியாக ஏமாற்ற நினைக்கும் இளைஞர்களும் காமக்கொடூரன்களும் இளம்பெண்களை வேட்டையாடிவிடுகின்றனர். இதுபோன்ற பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் தாங்களாகவே மெடிக்கல் சென்டரில் கர்ப்பத்தை கலைக்க மருந்தை வாங்கி தின்றுவிட்டு மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். ஒருசிலரோ வந்தது வரட்டும் என்று அரசு மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்து கொள்கின்றனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இளம்பெண்களது பிரசவம் மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 பிரசவங்கள் நடைபெறுகிறது, இளம் வயது திருமணம் ஒருபுறம் இருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை அதிவேகமாகப் பரவிவருகிறது.

பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு

இதுகுறித்து சமூக நல வழக்கறிஞர் சங்கமித்திரன் கூறுகையில்,’ குழந்தைகள் இளம்பெணகள் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பாலியல் குற்றங்கள் தெடர்பாக உயர்மட்ட அளவிலான பெண் அதிகாரிகளை கொண்டு பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திட வேண்டும். மேலும் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை வழக்கு முடியும்வரை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளில் இளம்பெணபளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், செமினார் வகுப்புகளை பெண் காவல் அதிகாரிகள், சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை கொண்டு வகுப்புகளை நடத்த அரசு ஆவண செய்யவேண்டும் என்றார்.

எதிர்காலத்தை காப்பாற்றுகிறோம்

இதுகுறித்து மயிலாடுதுறை அரசு மருத்துவரை கேட்டதற்கு இளம்பெண்கள் மாணவிகள் பாதிக்கப்பட்டு வரும் போது எங்களால் ஜீரணித்து கொள்ளவே முடியாது. இருந்தாலும் நாங்கள் தாயுள்ளத்துடன் பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றி அவர்களது எதிர்காலத்தையும் காப்பாற்றி அனுப்புகிறோம், ஆகவே காதல் என்ற பெயரில் ஆண்களால் உடல்ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள் மனம் உடைந்து தவறான முடிவை எடுக்காமல் மருத்துவரை அனுகி வைத்தியம் பார்த்தும் தங்களது வாழ்க்கையை சரியான பாதையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : women ,Mayiladuthurai , Mayiladuthurai
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்