×

கொரோனா பீதியால் நரசிம்ம சுவாமி, ரங்கநாதர் கோயில்கள் பூட்டப்பட்டது: மலைக்கோட்டைக்கு செல்லவும் தடை

நாமக்கல்: கொரோனா பீதி எதிரொலியாக நாமக்கல் நரசிம்ம சுவாமி, ரங்கநாதர் கோயில்கள் பூட்டப்பட்டுள்ளது. மலைக்கோட்டைக்கு செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மலைக்கோட்டையொட்டி, நரசிம்மசுவாமி மற்றும் ரங்கநாதர் கோயில்கள் அமைந்துள்ளன. பிரசித்தி பெற்ற இந்த கோயில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள். பெருமாள் சுவாமி நரசிம்மசுவாமி கோயிலில் உட்காந்த கோலத்திலும், ரங்கநாதர் கோயிலில் அனந்தசயன கோலத்திலும், மலைமீது உள்ள பெருமாள் கோயிலில் நின்ற கோலத்திலும் காட்சி அளிக்கிறார். தமிழகத்தில் உள்ள கோயில்களில் நாமக்கல் கோயில்களில் மட்டும் தான் இப்படி 3 வகை அவதாரத்தில் பெருமாள் காட்சி அளிக்கிறார்.

இந்த கோயில்கள் மத்திய அரசின் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. தற்போது, நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களையும் வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று மாலை நரசிம்மர், ரங்கநாதர் கோயில்கள் பூட்டப்பட்டன. இதேபோல், மலைக்கோட்டைக்கு செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நரசிம்ம சுவாமி கோயில் பூட்டப்பட்டுளளதால் நேற்று மாலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கடவுளையே தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு கோயில்களை பூட்டி வைத்துள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது என்றனர்.

Tags : Narasimha Swamy ,panic ,Ranganathar ,Corona , Corona
× RELATED சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில்...