×

கொரோனாவை சீன வைரஸ் என்று அழைத்த அதிபர் ட்ரம்ப் : வீண் புரளி கிளப்ப வேண்டாம் என டிரம்புக்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங் : கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 8,000ஐ எட்டியுள்ள நிலையில்,  வைரஸ் பரவல் தொடர்பாக சீனா - அமெரிக்கா இடையே மோதல் வெடித்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது 165 நாடுகளுக்கு பரவி 7 லட்சத்துக்கு 965 பேரை பலி கொண்டுள்ளது.சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான், தென்கொரியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி,ஸ்பெயின் அமெரிக்கா என 75% நாடுகளில் இந்த வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் உலகமே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கோவிட் 19 வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ள நிலையில்,கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்து வரும் அதிபர் டிரம்ப், சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்களை காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ, இது அமெரிக்கர்களுக்கும் ஆசியர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்று கூறியுள்ளார். டிரம்பின் கருத்துக்கள் கடும் கோபத்தை ஏற்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான், இது போன்ற நியாயமற்ற குற்றச் சாட்டுக்களை சுமத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனிடையே சீனாவுக்கு அடுத்தப்படியாக 2,158 பேரை பலி கொடுத்துள்ள இத்தாலியில் இறந்தவர்கள் குறித்த புகைப்படங்கள் நாளிதழில் 10 பக்கங்களுக்கு வெளிவந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : Chinese ,Corona , Corona, Virus, China, USA, Italy
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...