×

கலசபாக்கம் அருகே சிவலிங்கத்தின் மேல்பாகம் திருட்டு; சமூக விரோதிகள் கைவரிசை

கலசபாக்கம்: கலசபாக்கம் அடுத்த சீத்தம்பட்டு கிராமத்தில் வெட்ட வெளியில் பாதாள லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவ்வழியாக சென்றவர்கள் சிவலிங்கத்தின் மேல் பாகம் இல்லாமல் இருப்பதை கண்டு  அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பழமைவாய்ந்த பாதாள லிங்கேஸ்வரின் மேல் பாகத்தை விஷமிகள் திருடிச்சென்றுள்ளதாக கருதுகிறோம். இதனால், இந்த ஊருக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே காணாமல் போன சிலை கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

Tags : Sivalingam ,Kalasakkam ,Theft , Theft
× RELATED கலசபாக்கம் பகுதிகளில் மர்மநோயால்...