×

இந்திய பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சியால் கண்ணீர் விடும் முதலீட்டார்கள்: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 271.05 சரிந்து 30.308.04 புள்ளிகளுடன் வர்த்தகம்

மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. இதன் எதிரொலியாக, 2-வது வாரமாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வந்தது. வாரத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் வணிகம்  தொடங்கிய உடனேயே பங்குச் சந்தையின் புள்ளிகள் மளமளவென குறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு  எண் சென்செக்ஸ் 1,885 புள்ளிகள் குறைந்து 32,240 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  513 புள்ளிகள் குறைந்து 9,500 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

நேற்று, வர்த்தக தொடக்கத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 530.55 புள்ளிகள் சரிந்து 30,859.52 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 118 புள்ளிகள் சரிந்து 9,079 புள்ளிகளுடன்  வர்த்தகம் தொடங்கியது. இந்நிலையில், இன்று வர்த்தக தொடக்கத்தின் முதல் இந்திய பங்குச்சந்தையின் புள்ளிகள் சற்று உயர்ந்தது. ஆனால், தற்போது, சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 518.81 புள்ளிகள் உயர்ந்து 31,097.81 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், 271.05 புள்ளிகள் சரிந்து 30,308.04 ஆக வர்த்தகம் நடைபெறுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 110.05 புள்ளிகள் சரிந்து 8,857.00 புள்ளிகளுடன்  வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே இந்த பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மனவேதனை ஏற்பட்டுள்ளது.


Tags : Sensex , Sensex plunges by 271.05 points to close at 30,308.04
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...