×

வீட்டுக்கு முன் தெளிக்கும் சாணம், முகத்திற்கு மஞ்சள், வீடுகளில் திண்ணை, தாம்பூலம் மெல்லும் பழக்கம் : வைரஸ் நோய்களை குணமாக்கும் தமிழர் பாரம்பரியம்.

சென்னை :உயிர்கொல்லி வைரஸான கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த வாழ்க்கை முறைகளின் பிரதிபலிப்பாக இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16%  அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர்கள் பாரம்பரியமாக கருதப்படுகிறது. தோளில் துண்டு அணிவதில் இருந்து வீட்டு வாசலில் தண்ணீர் தொட்டி வைப்பது, மாலை நேரத்தில் சாம்பிராணி போடுவது என அனைத்தும் தமிழர்கள் மேற்கொண்ட நோய் தடுப்பு நடவடிக்கை என்கிறார் எழுத்தாளர் ஆதிநெடுஞ்செழியன். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,உணவு முறைகளாலேயே வியாதிகளை விரட்டியது தமிழ் மரபு.பழக்க வழக்கங்கள் வியாதிகளை நெருங்காமல் பார்த்துக் கொண்டது.வீட்டுக்கு முன் தெளிக்கும் சாணம், கிருமிகள் நுழையாமல் தடுத்தது.சாணம் காய்ந்தவுடன் மாக்கோலம் போடுவது எறும்புகள் உண்பதற்காகேவே.

திண்ணை வைத்து அந்த காலத்தில் வீடுகள் கட்டினார்கள். பூமியின் காந்த சக்தி நம் உடலில் பரவவே திண்ணையில் அமர்ந்து வந்தனர்.திண்ணை உட்கார்ந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,கலந்த தாம்பூலம் மெல்லும் பழக்கம் இருந்தது.வாயில் இருந்து பிறருக்கு கிருமி நாசினி பரவாமல் தாம்பூலம் தடுத்தது. சித்த வைத்தியத்தில் எந்த நோய்க்கும் முதலில் சொல்லும் மருந்து வெற்றியைதான்.  குழந்தை பிறந்த வீடுகளில் வேப்பிலை வைத்திருப்பார்கள்.ஏனென்றால் எளிமையாக தாக்கும் கிருமிகளை வேப்பிலை தடுத்துவிடும்.அந்த காலத்தில் மஞ்சள் தேய்த்து பெண்கள் குளிப்பார்கள்.பெண்களுக்கு பொலிவை தருவதுடன் மஞ்சள் தூள் கிருமி நாசினியாகவும் உள்ளது. என்றார்.


Tags : house , Homemade spraying dung, turmeric on the face, chewing gum on the house, Tamil tradition: curing viral diseases
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி