×

கொரோனா வைரஸ் பிரச்னையால் வெளிநாடு செல்லமுடியாமல் இளைஞர்கள் தவிப்பு: புது மாப்பிள்ளைகளுக்கு புது சிக்கல்

பணகுடி: நெல்லை மாவட்டம் காவல்கிணறு, பணகுடி, வடக்கன்குளம், வள்ளியூர், கலந்தபனை, தளவாய்புரம், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வளைகுடா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
 இதில் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரிந்து, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்பே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இளைஞர்கள் பலர் தற்போது இந்த நிறுவனங்களுக்கு மீண்டும் பணிக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘குறிப்பிட்ட சில மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வோம். அடுத்த பணி தொடங்கும் போது அந்த நிறுவனங்கள் எங்களை உடனடியாக அழைக்கும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதால் எங்களுக்கான விசா நடைமுறையை கம்பெனிகள் நிறுத்தி வைத்துள்ளன. நாங்கள் தற்போது பணி இல்லாமல் தவித்து வருகிறோம்.  

வெளிநாட்டு வேலை வருமானத்தை நம்பி வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களை மாதம் தோறும் கட்டவேண்டியுள்ள நிலையில் தற்போது அது கேள்விகுறியாகி உள்ளது. சிலருக்கு விசா வந்த நிலையில் ஏர்போர்ட் வரை சென்று வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள திருமணத்திற்கும், ஏற்கனவே, நிச்சயம் செய்யப்பட்டு தேதி குறிக்கப்பட்ட புதுமாப்பிள்ளைகளும் அந்த தேதிக்கு விசா கிடைக்காமல் வெளிநாட்டில் இருந்து வரமுடியாமல் புலம்பி வருகின்றனர்’ என்றனர்.

Tags : children ,migration , Coronavirus, Abroad, Young People, Newborns
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...