×

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பாஜ எம்பிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் குறித்து பாஜ எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பாஜ நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் சிறப்பாக செயல்படும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், விமான பணியாளர்கள் ஆகியோரை பிரதமர் புகழ்ந்து பேசினார்.  பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கூட்டத்துக்கு பின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரமாகவும் அயராதும் பணியாற்றிய மருத்துவர்களின் சேவையை பிரதமர் பாராட்டியுள்ளார். வைரசுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊடகங்களையும் பிரதமர் புகழ்ந்தார்.

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜ எம்பிக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இதற்காக பொதுமக்களை உள்ளடக்கிய சிறு குழுக்களையும் ஏற்படுத்தவேண்டும் என்றும், அதே நேரத்தில் அடுத்த மாதம் 15ம் தேதி வரை பெரும் போராட்டங்கள் எதையும் நடத்துவதில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நடைபெறும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலஅளவு குறைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி ஏப்ரல் 3 வரை நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் எனவும் உறுதியளித்துள்ளார்.  இவ்வாறு ஜோஷி தெரிவித்தார்.




Tags : MPs ,Modi ,Baja , Corona, Baja MPs, Prime Minister Modi
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...