×

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் உதவி நிதி 2 லட்சத்தை மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதி 2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பயனாளர்களுக்கு வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு  நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகை மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2020, ஜனவரி மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சத்தை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளிமாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.

Tags : MK Stalin ,Rs ,Karunanidhi, Foundation , Karunanidhi, Foundation, MK Stalin
× RELATED கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் கல்வி உதவி நிதி