×

மின்வாரியத்தில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில்  தமிழக மின்வாரியமும் தன் பங்குக்கு சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக மின்சார வாரியம் ‘பயோமெட்ரிக்’ முறையிலான வருகை பதிவினை வரும் 31ம் தேதி வரை பின்பற்ற வேண்டாம் என கூறியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: மின்வாரியம் அனைத்து அனல் மின்நிலையம், நீர் மின்நிலையம், காஸ் மின்நிலையம் போன்றவற்றில் ஊழியர்களின் வருகையை ‘பயோமெட்ரிக்’ முறையில் பதிவு செய்ய வேண்டும் எனக்கூறியிருந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நடைமுறையானது அனைத்து மின்நிலையங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது அலுவலக காரணங்களுக்காக பயோமெட்ரிக் முறையில் வரும் 31ம் தேதி வரை வருகை பதிவு செய்ய வேண்டாம். மாறாக வருகை பதிவேடு மூலமாக ஊழியர்களின் வருகையை மெனுவல் ஆக எடுக்க வேண்டும் என மின்வாரியம் கூறியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : system shutdown , Electricity, Biometric, Parking
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...