×

அடிப்படை உரிமையை சிஏஏ மீறவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: `‘குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அடிப்படை உரிமை எதுவும் மீறப்படவில்லை’’  என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தரப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை கடந்த ஆண்டு டிச.18ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், சிஏஏவை அமல்படுத்த தடையில்லை என்று கூறியது. மேலும் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு மத்திய அரசு 129 பக்க பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. உள்துறை அமைச்சக இயக்குனர் பி.சி.ஜோஷி தாக்கல் செய்துள்ள இதில், ‘‘சிஏஏ அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதல்ல இந்த சட்டம். அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளிலிருந்து வரும் மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை’’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : CAA ,government ,Supreme Court ,Central , Fundamental Right, CAA, Supreme Court, Federal Government, Information
× RELATED மனித உரிமை ஆணைய ஊழியருக்கு கொரோனா