×

படிக்கட்டில் தடுமாறி விழுந்த டிரைவர் பலி

பெரம்பூர்: அயனாவரம் சோலையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (30). டிரைவராக  வேலை செய்து வந்த இவர், மது போதைக்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது. அதன்படி கடந்த 13ம் தேதி மது போதையில் வீட்டிற்கு வந்த சுரேஷ், முதல் மாடியில் இருந்து கீழே இறங்கும்போது படிக்கட்டில் கால் தவறி விழுந்தார். அப்போது, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Stair, stumble, driver, kills
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...