×

வாலிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் ஒருவர் சரண்

சென்னை: சென்னை பெரியமேடு பட்டுநூல் சர்தார் ஷா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25), கூலிதொழிலாளி. இவர், கடந்த 13ம் தேதி இரவு சூளை ரவுண்டானா அருகில் நடந்து சென்றபோது மர்மநபர்கள் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பினர். தகவலறிந்து வந்த பெரியமேடு போலீசார், சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியை சேர்ந்த தங்கம், ஹேமந்த்குமார், பாலு ஆகியோர் முன்விரோத தகராறில் மணிகண்டனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. தப்பியோடிய அவர்களை போலீசார் தேடிவந்தனர். இதனிடையே, கொலை வழக்கில் போலீசார் தேடுவதை அறிந்த ஹேமந்த்குமார் நேற்று விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் அருண்குமார் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் ஹேமந்த்குமாரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Charan ,court ,youth murder ,youth murderers , The murder of the plaintiff, the court, one, the Saran
× RELATED குட்கா மீதான தடை ஓராண்டுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு