சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் 2 பேர் சிறையில் அடைப்பு

சென்னை: வியாசர்பாடி சாமந்திப்பூ காலனியை சேர்ந்த 15 வயது சிறுமியை, திருமணம் செய்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்த வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை  சேர்ந்த தீபக் (26) என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

* சேத்துப்பட்டு பாஸ்புரத்தை  சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் எபினேசர் (55) என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

* கோயம்பேடு சின்மயா நகர் வி.வி.கோயில் தெருவை சேர்ந்த எர்னஸ்ட் டேவிட் (47) என்பவரது வீட்டில் வைர, தங்க நகைகளை சிறுக சிறுக திருடிய வீட்டு வேலைக்காரி ஆழ்வார் திருநகரை சேர்ந்த ராகேல் (35) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 3 சவரன் நகைகள், 2 சவரன் வைர கம்மலை பறிமுதல் செய்தனர்.

* பம்மல் நாகல்கேணி பகுதியில் வசித்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த மனோஜ் (22) மற்றும் மாலிக் (26) ஆகியோரை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (19) மோகன் (18) அசன் பாசா (18) உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

* தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நூதன முறையில் செல்போன்களை திருடி வந்த ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த வெங்கடேஷ் (20) மற்றும் தரண்குமார் (19) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

* சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3வது தெருவில் போதை மாத்திரை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த அருண்குமார் (22) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: