×

சூப்பர் டிவிஷன் ஹாக்கி ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக, சென்னையில் நடந்து வந்த சூப்பர் டிவிஷன் ஹாக்கிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிஷன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் ஆகியவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் நடந்து வந்த சூப்பர் டிவிஷன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியும் மார்ச் 31ம் தேதி வரை தள்ளி வைக்கப்படுவதாக சென்னை ஹாக்கி சங்கம் அறிவித்துள்ளது.


Tags : Super, division, hockey, deferral
× RELATED ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்