மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை: மத்திய அரசு

டெல்லி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிலிப்பைன்சில் மருத்துவக் கல்வி பயின்று வரும் தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் 200 பேர், கொரோனா வரைஸ் அச்சுறுத்தல் காரணமாக விமானத்தில் நாடு திரும்பினர். அவர்கள் பயணித்த விமானம் கோலாலம்பூரில் தரையிறங்கிய நிலையில், மலேசியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதனால், கோலாலம்பூரில் இருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இதனையடுத்து மணிலாவிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட மாணவர்கள், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் உதவியுடன் மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். மாணவர்களை பிலிப்பைன்சுக்கு அனுப்பிய நிறுவனமே அழைத்து வரவும் ஏற்பாடு செய்கிறது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மாணவர்களை அழைத்துவர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Related Stories:

>