×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137-ஆக அதிகரிப்பு: வைரஸை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை

டெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 13 பேர் மீட்கப்பட்டுள்ளார்; 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 137-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39, கேரளாவில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோரில் 116 பேர் இந்தியர்கள், 21 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கேரளா – 24 (வெளிநாட்டினர் – 2), மகாராஷ்டிரா- 39 (வெளிநாட்டினர் – 3), உ.பி.-14 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 8, கர்நாடகா – 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் – 6, ராஜஸ்தான் -2 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 3 (வெளிநாட்டினர் 3), தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 3, பஞ்சாப் -1, ஹரியானா – 1 (வெளிநாட்டினர் -15), ஆந்திரா – 1, ஒடிஷா – 1, உத்தரகண்ட் – 1 என மொத்தம் 137 பேருக்கு  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 3 பேருக்கும், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

Tags : India ,Government , India, Corona
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...