×

இந்தியாவிற்கு வந்த 50க்கும் மேற்பட்ட மலேசிய பயணிகள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு

டெல்லி: இந்தியாவிற்கு வந்த 50க்கும் மேற்பட்ட மலேசிய பயணிகள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக மலேசியாவிற்கு விமானப் போக்குவரத்து இல்லாததால் நாடு திரும்ப முடியவில்லை. மலேசியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு 50க்கும் மேற்பட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலேசியா திரும்ப முடியாமல் தவிப்போரில் 20க்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள் ஆவர்.

Tags : Travelers ,Malaysian ,Corona ,India , Corona
× RELATED வேளாண் உதவி இயக்குனர் தகவல் பயணிகள் யாருமின்றி