×

கொரோனா பாதிப்பை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே சிறந்த வழி: ரோகித் சர்மா கருத்து

டெல்லி: கடந்த சில வாரங்கள் எல்லோருக்கும் கடினமானதாக அமைந்துள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். சீனாவின் வுகானில் பரவத் தொடங்கிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அங்கு மட்டும் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். தற்போது இங்கு நிலைமை கட்டுக்குள் வரும் அதே நேரத்தில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகின்றது. உயிரிழப்புக்களும் நூற்றுக்கணக்கில் உயர தொடங்கியுள்ளது. உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி தனிமைச்சிறையில் முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ், விளையாட்டையும் விட்டுவைக்கவில்லை.

கோவிட்-19 தாக்குதலால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இதனை பார்க்க வேதனையாக உள்ளது. இயல்பு நிலைக்கு திரும்ப, நான் அனைவரும் ஒன்றிணைவதே சிறந்த வழி. அப்போது புத்திசாலிதனமாகவும், துடிப்புடனும் செயல்பட்டு சுற்றுப்புறத்தை நன்கு அறிந்து வைத்தல் வேண்டும்.

யாருக்காவது சந்தேகத்துக்குரிய அறிகுறி தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துமனையை தொடர்பு கொள்ள வேண்டும். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பணிகள் பாராட்டுக்குரியதாகும். இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என்று கூறியுள்ளார்.

Tags : Rohit Sharma , Corona, Rohit Sharma
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...