×

கொரோனா வைரஸ் எதிரொலி: ஹாங்காங்கில் 157 பேருக்கு கொரோனா தொற்று...புதிதாக 57 பேருக்கு பாதிப்பு உறுதி!

ஹாங்காங்: ஹாங்காங்கிற்கு செல்லும் அனைவரும் நாளை மறுதினம் முதல் 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இன்றைய நிலவரப்படி 157 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 57 பேருக்கு புதிய கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்ப்பட்டவர்களில் 50 பேர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 பேர் மட்டுமே உள்ளூர் மக்களாவர். கொரோனா வைரஸ் காரணமாக ஹாங்காங் அரசு ஆரம்பத்தில் சுணக்கம் காட்டினாலும் தற்போது மிக மிக தீவிரமாக நோயை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. உதாரணமாக ஹாங்காங்கில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வருகின்ற 19ம் தேதி நள்ளிரவு முதல் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கட்டாய தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

ஏற்கனவே ஒருசில நாடுகளை ஹாங்காங் அரசு தடை விதித்திருக்கிறது. உதாரணமாக ஸ்பெயின், இத்தாலி, கொரியா, ஜெர்மனியின் சில பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எலக்ட்ரானிக் ப்ரஸ்லெட் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட யாரேனும் சட்டத்தை மீறினாலோ அல்லது வெளியேறினாலோ அவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று ஹாங்காங் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த கடுமையான சட்ட திட்டங்களால் அருகிலுள்ள நகரம் மக்காவை போலவே ஹாங்காங்கும், இந்த நோய் தொற்றை பெருமளவு கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

Tags : victims ,Hong Kong , Corona, Hong Kong, infection, 57 people, impact confirmed!
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்