×

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: தமிழக சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு தடை

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள் மற்றும் கிளை சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, சிறை கைதிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிறை கைதிகளை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். சென்னை புழலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல தமிழகத்தில் வேலூர், கோவை, சேலம், பாளையங்கோட்டை, கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள சிறைகளிலும் பல ஆயிரக்கணக்கான கைதிகள் உள்ளனர்.

கைதிகளைப் பார்க்க உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனுமதி பெற்று வருவது உண்டு. இதன்மூலம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தால் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பாக நேற்றைய தினம் தமிழக முதலைச்சர் தரப்பிலும், தமிழக அரசு தரப்பில் இருந்தும், பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட வேண்டும். மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு விதமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறைகளில் கைதிகளை சந்திக்கவும் 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர்கள், உறவினர்கள், கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளை வழக்கறிஞர்களோ, அவர்களது உறவினர்களோ அடுத்த 2 வாரங்களுக்கு சந்திக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Corona ,Tamil Nadu ,jails ,detainees , Corona, Tamil Jail, Prisoner, 2 weeks, ban
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு புழல் சிறையில் 39 கைதிகள் எழுதினர்