×

ஆண்களை போல் திறமையுடன் பயணிக்க முடியும்: ராணுவத்தை போல் கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆண் அதிகாரிகளைப் போலவே திறமையுடன் பெண்களும் பயணிக்க முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாகவும், உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்; குடும்பப் பராமரிப்பில் பெண்களின் பங்கு மிகவும் பெரியது.

ராணுவத்தில் அவர்களுக்கு ஆபத்து அதிகமாகவே உள்ளது. கிராமப்புற பின்னணியில் இருந்தே பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சேர்கிறாரக்ள். தற்போதைய சமூக நடைமுறைக்கு ஏற்றவாறு, பெண்களை தளபதிகளாக ஏற்றுக் கொள்ள மனதளவில் இன்னும் தயாராகவில்லை என்று கூறியது.  இந்நிலையில், இந்த கடந்த பிப்ரவரி 17-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க வேண்டும்.

14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவி வழங்க வேண்டும். ராணுவத்தில் பெண்களை நியமிப்பதற்கான உத்தரவை நிரந்தரமாக வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், பெண்களுக்கு ராணுவத்தில் சமத்துவம் வழங்க மறுக்கும் மத்திய அரசின் வாதத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ராணுவத்தை போல் கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணுவத்தில் களத்தில் இறங்கி சண்டையிடாத பணிகளில் பெண்களுக்கு நிரந்தர பணி தர ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடற்படையில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை உச்ச நீதிமன்றம் வழங்குகிறது. பெண்கள், ஆண் அதிகாரிகளைப் போலவே திறமையுடன் பயணிக்க முடியும், இதில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பால் அதிகாரிகள் மட்டத்தில் ஆண்களுக்கு நிகரான சலுகைகளை பெண்களுக்கும் பெற வாய்ப்பு உள்ளது.

Tags : Women ,Supreme Court ,men ,Navy Women , Women can travel as efficiently as men: Supreme Court directs women to be given equal rightsWomen can travel as efficiently as men: Supreme Court directs women to be given equal rights
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...