×

திரைப்படங்கள், சீரியல்கள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தம்: தெ.தி.தொ.ச. தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 19-ஆம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. வடபழனியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்படங்களில் கற்பனை செய்யப்பட்ட நோய்களை விட தீவிரமாக கொரோனா தாக்கம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால் திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரங்கள் உள்ள அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போதைய நிலவரப்படி 36 திரைப்படங்களும், 60 சீரியல்களும் படப்பிடிப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். படப்படிப்பு தொடங்குவது குறித்து வரும் 25-ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என்று செல்வமணி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திரையரங்குகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியனவற்றை மூட வேண்டும் எனவும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை மார்ச் 31 வரை நடத்தக்கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகளுக்கு மார்ச் 31 வரை அனுமதி வழங்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : RK Selvamani ,Stop ,Filming , All types of filming, including movies, serials, stops: Interview with Chairman RK Selvamani
× RELATED போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கோரி...