×

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் 238 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்

பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த பின்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட மற்றும் அபிவிருத்தி சார்ந்த பகுதிகளுக்கு பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ₹238 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும் திருச்சி நகர அபிவிருத்தி சார்ந்த பகுதிகளுக்கான குடிநீர் விநியோக மேம்பாட்டு பணிகள் 53.79 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* ஒவ்வொரு மாநகராட்சிக்கும், தலா ஒரு கழிவறை வீதம் அனைத்து மாநகராட்சிகளிலும் குளிரூட்டப்பட்ட கழிவறைகள் பரீட்சார்த்த முறையில் அமைக்கப்படும்.
* சென்னை மாநகராட்சியின் பாதசாரி போக்குவரத்து நெரிசலை எளிதாக்க, லஸ் சர்ச் சாலை - லஸ் கார்னர், எல்.பி. சாலை - அடையாறு பணிமனை,  சர்தார் படேல் சாலை - அண்ணா பல்கலைக்கழகம், ஆற்காடு சாலை - விஜயா போரம்  மால், அண்ணா நகர் 2வது நிழற் சாலை - ஐயப்பன் கோயில், அண்ணா நகர் 3வது நிழற்சாலை - கந்தசாமி கல்லூரி, புரசைவாக்கம் நெடுஞ்சாலை - அபிராமி மெகா மால்  ஆகிய 7 இடங்களில்  7 இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் 45 கோடியில் அமைக்கப்படும்.
* பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்படும் குப்பை உயிரி அகழ்வு  முறையில் அகற்றி, 200 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்படும்.
* வில்லிவாக்கத்தில் சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் ‘நீர் கருத்து பூங்கா மற்றும் அருங்காட்சியகம்’ முதற்கட்டமாக 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* 8 பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து 131 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

Tags : Trichy Corporation , Trichy Corporation, Sewerage Project
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அமமுக...