×

ஆர்ப்பாட்ட வழக்கில் ராமதாஸ் விடுதலை

விழுப்புரம்: பாமக சார்பில் கடந்த 2013ல் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடந்தது. அப்போது, மாநாட்டிற்கு சென்றவர்கள், மற்றொரு தரப்பினருக்கிடையே மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரி விழுப்புரத்தில் பாமக சார்பில் தடையை மீறி 2013 ஏப்ரல் 30ல் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 362 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இவ்வழக்கில் 3 ஆண்டுக்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேரையும் விடுதலை செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட் நேற்று  உத்தரவிட்டார்.



Tags : Ramadas ,protest ,Protests , Demonstration case, Ramadas, released
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்