குடியாத்தத்தில் நுழைந்த 14 யானைகள் விரட்டியடிப்பு

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 14 யானைகள்  அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். நேற்று முன்தினம் இரவு மீண்டும் அந்த 14 யானைகள் குடியாத்தம் அருகே உள்ள குடிம்பிபட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் நுழைய முயன்றது. வனத்துறையினர், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.

Related Stories:

>