×

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் பாஜ வலியுறுத்தல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் மழை காரணமாக பயிர்கள் நாசமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் எம்பிக்கள் வலியுறுத்தினார்கள். மாநிலங்களவையில் நேற்று பூஜ்யநேரத்தின்போது பாஜ மற்றும் சமாஜ்வாடி எம்பிக்கள் பயிர்கள் சேதம் குறித்து மதிப்பீடு செய்வதற்கு மத்திய அரசின் குழுவை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்கள். திடீரென பெய்த மழையினால் விவசாயிகளின் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் நாசமடைந்தன. ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும்.

வடக்கு டெல்லியில் மழை மற்றும் புயல் காரணமாக கோதுமை மற்றும் காய்கறி பயிரிட்ட விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். டெல்லியில் 50 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என பாஜ எம்பி விஜய் கோயல் கோரிக்கை விடுத்தார். அதேபோல் பாஜ எம்பி ஹர்நாத்சிங் யாதவ் கூறுகையில், “கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக கோதுமை மற்றும் மாமரங்கள் சேதடைந்துள்ளன. 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளன. பயிர் சேதத்தை மதிப்பீடு செய்வதற்கு மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும்’’ என்றார். இதேபோல் சமாஜ்வாடி உறுப்பினர் ரேவதி ராமன் சிங் உள்ளிட்டோரும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

Tags : Rajya Sabha Farmers ,Baja ,Rajya Sabha , Farmer, Relief, Rajya Sabha, Baja, Emphasis
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...