×

நடிகை இலக்கியா பெயரில் போலி டிக்டாக் ஐடி உருவாக்கி பணம் பறிப்பு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை காட்டுப்பாக்கம், செந்தூர்புரம் மனோகரன் தெருவை ேசர்ந்த நடிகை இலக்கியா(21) சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் ஜாம்பி  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளேன். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். டிக்டாக் செயலியில் சில வீடியோக்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளேன்.

இதற்கிடையே எனது படம் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி, என்னிடம் ஆண்கள்  நேரலையில் பேச ஏற்பாடு செய்வதாக கூறி ஒரு கும்பல் பணம் பெற்று மோசடி செய்வதாக தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். டிக்டாக் செயலியில் இரண்டு ஐடிக்கள் தான் எனக்கு உள்ளன. என் பெயரில் போலி ஐடி உருவாக்கி விஷமிகள் பணம் பறிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.


Tags : Actress Ilika ,Commissioner of Police , Actress Ilika, Commissioner of Police, Complaint
× RELATED சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய...